கடைகளில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது

13 November 2020, 11:12 pm
Quick Share

சென்னை: புளியந்தோப்பு அருகே ரியல் எஸ்டேட் தரகர் ரசாக் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு போலீசார் சிறையில் அடைத்தனர்.

சென்னை புளியந்தோப்பு பட்டாளம் மார்க்கெட் பகுதியில் , கடைகளில் கள்ள நோட்டு மாற்றப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிடைத்த தகவலின் அடிப்படையில் புளியந்தோப்பு போலீசார் மார்க்கெட் பகுதிகளில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு காய்கறி கடையில் , ரசாக் நியாஸ் சேட் (50) என்ற ரியல் எஸ்டேட் தரகர் கள்ள நோட்டு மாற்றியது தெரிய வந்தது. இது குறித்து பட்டாளத்தில் உள்ள தனியார் வங்கியில் பணத்தை சோதனை செய்ததில் கள்ள நோட்டு என போலீசார் உறுதி செய்தனர். விசாரணையில் , முறையாக பதிலளிக்காத ரியல் எஸ்டேட் தரகர் ரசாக் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து புளியந்தோப்பு போலீசார் சிறையில் அடைத்தனர்.

Views: - 15

0

0