பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றம்

Author: Udhayakumar Raman
24 September 2021, 3:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலக்கு வந்ததை அடுத்து பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் மற்றும் பேனர்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்

புதுச்சேரிகான உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் மாததிற்குல் நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துக்களான உள்ளாட்சி தேர்தல் வருகின்ற அக்டோபர் மாதத்தில் மூன்று கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்றைய தினம் அறிவித்திருந்த நிலையில், தேர்தல் தேதிகள் அறிவித்த உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமல்க்கு வந்தது இதனை அடுத்து புதுச்சேரியில் உள்ள அந்தந்த நகராட்சிகளுக்கு உட்பட்ட பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் போஸ்டர்கள் மற்றும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர், இதில் முதற்கட்டமாக புதுச்சேரி நகராட்சிக்கு உட்பட்ட லால் பகதூர் சாஸ்திரி விதி, ஆம்பூர் சாலை உள்ளிட்ட இடங்களில் புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் போஸ்டர்களை கிழித்து, பேனர்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

Views: - 171

0

0