பழிக்குப்பழியாக வாலிபர் வெட்டி படுகொலை:உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

Author: Udhayakumar Raman
13 September 2021, 3:32 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கடந்த 3 மாதங்களுக்கு முன் கஞ்சா விற்பனையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக காந்தி மார்க்கெட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒருவர் பின் ஒருவராக அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த 10 பேரில் ஒருவர் கிசாந்த். இன்று இயற்கை உபாதைக்காக பழைய ராமகிருஷ்ண திரையரங்க மேம்பாலம் கீழே உள்ள மாநகராட்சி கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த 4 பேர் கிசாந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் பழிக்குப்பழியாக இந்த படுகொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Views: - 223

0

0