நகர பகுதியில் அமலில் உள்ள 144 தடை உத்தரைவை திரும்ப பெற வலியுறுத்தி சாலை மறியல்

22 January 2021, 2:42 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரி நகரபகுதியில் அமலில் உள்ள 144 தடை உத்தரைவை திரும்ப பெற வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

புதுச்சேரியில் ஆளுனர் கிரன்பேடியை கண்டித்து கடந்த 8 ஆம் தேதி அன்று காங்கிரஸ் மற்றும் கூட்டனி கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனால் புதுச்சேரி நகரபகுதி மற்றும் சட்டபேரவையை சுற்றி உள்ள பகுதகளில் மாவட்ட ஆட்சியர் 144 தடை பிறப்பித்திருந்தார். இந்நிலையில் போராட்டம் முடிந்து 10 நாட்களுக்கு மேல் ஆகியும் 144 தடை அமலில் உள்ளதால் கடற்கரை, அரசு மருத்துவமனை, தபால் நிலையம், தலைமை செயலகம், பூங்கா ஆகிய இடங்களுக்கு மக்கள் செல்ல முடியாமல் உள்ளதால்,

அமலில் இருக்கும் 144 தடையை மாவட்ட ஆட்சியர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்ப்பட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளே செல்ல முயன்ரனர். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்ததால் ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வழுதாவுர் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது அவர்களுக்கும் போலிசார்க்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட தடுப்புகளை மீறி உள்ளே சென்று முற்றுகையில் ஈடுப்பட்டனர்.

அவர்களை உள்ளே இருந்த போலிசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டகாரர்கள் அலுவலகம் வாயலில் அமர்ந்து போராட்டதில் ஈடுப்பட முயன்றனர். அப்போது அங்கிருந்த போலிசார் முற்றுகையில் ஈடுப்பட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் இந்த தடையை உடனடியாக நீக்க வில்லை என்றால் புதுச்சேரி ஸ்தம்பிக்கும் அளவிற்கு விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் போராட்டம் நடைபெறும் என எச்சரித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Views: - 5

0

0