சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி : நீலகிரியில் காவல்துறையினருடன் கைகோர்த்த தன்னார்வலர்கள்!!
21 January 2021, 1:52 pmநீலகிரி : சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி உதகமண்டலத்தில் காவல்துறையினர், தன்னார்வலர்கள் பங்கேற்ற ஹெல்மெட், விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
போக்குவரத்து மற்றும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 32வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி நாடு முழுவதும் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக உதகையில் மாவட்ட வட்டார போக்குவரத்து துறையினர் சார்பில் இன்று ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு சசி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சேரிங் கிராஸ் பகுதியில் தொடங்கிய பேரணி கமர்ஷியல் சாலை வழியாக மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்தது. இதில் காவல்துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணிந்து பேரணி மேற்கொண்டனர்.
மேலும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும், விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை, வட்டார போக்குவரத்து போக்குவரத்துத் துறை அலுவலர் திரு தியாகராஜன் ஆய்வாளர் திரு குலோத்துங்கன் ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கினர்.
0
0