ஊரடங்கிலும் புழல் ஏரியில் தூண்டில் போட்டு மீன் விற்பனை…
16 August 2020, 2:42 pmசென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் ஊரடங்கிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்வமுடன் மீன் பிடித்து கிலோ ஒன்றுக்கு 250 ரூபாய் வரை முதல் 400 ரூபாய் விற்பனை செய்தனர்.
சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்து ஏரியை ஒட்டி கரைப்பகுதி மற்றும் ஆழமான பகுதிகளில் இறங்கியும் மீன்களை தூண்டில் போட்டு பிடித்தனர். புழல் ஏரியில் ஜிலேபி, விரால், கட்லா, வாளை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் கிடைப்பதாலும் ஊரடங்கால் இன்று மீன் விற்பனை சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில், கிலோ ஒன்றுக்கு 250 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை அங்கேயே விற்பனை செய்தனர். மேலும் ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்ட பலர் தங்களது வீடுகளில் சமையல் செய்வதற்கும் மீன்களை ஆர்வமுடன் தூண்டில் போட்டு பிடித்துச் செல்கின்றனர்.