பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

Author: Udayaraman
4 January 2021, 3:51 pm
Quick Share

ஈரோடு: பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புகளை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வழங்கினார்.

மக்கள் அனைவரும் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசாக ரூபாய் 2,500 மற்றும் கரும்பு உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார் இதனையடுத்து இன்று முதல் தமிழகமெங்கும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், கோணமூலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலை கடைகளில் பொங்கல் தொகுப்புகளை பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வழங்கினார் நிகழ்ச்சியில் அ.இ.அதிமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Views: - 43

0

0