புதுச்சேரியில் சுழற்சி முறையில் பள்ளி இயக்கம்:கல்வித்துறை அமைச்சர் தகவல்

Author: Udhayakumar Raman
27 October 2021, 4:39 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் வரும் நவம்பர் 8ஆம் தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவி்த்துள்ளார்.

இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குநரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், புதுச்சேரியில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 8ஆம் தேதி முதல் திறக்கப்படுவதாக அறிவித்தார், திங்கள் முதல் சனிக்கிழமை வரை சுழற்சி முறையில் அரை நாள் மட்டும் பள்ளிகள் இயங்கும் என்றும் 1/3/5/7 வகுப்புகள் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை இயங்கும் என்றும் 2/4/6/8 வகுப்புகள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில் இயங்கும் என தெரிவித்த அமைச்சர் நமச்சிவாயம், அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்,

மேலும் மாணவர்களுக்கு வருகை பதிவளடு கட்டாயம் இல்லை, விருப்பம் உள்ளவர்கள் பள்ளிகளுக்கு வரலாம் எனவும், மாணவர்கள் இலவச பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார், தற்போதைக்கு மாணவர்களுக்கு மதிய உணவு கிடையாது என தெரிவித்த அவர், புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார், மேலும் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்தார்.

Views: - 168

0

0