லாரி மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Author: Udayaraman
10 October 2020, 8:34 pm
Quick Share

வேலூர்: குடியாத்தம் அருகே லாரி மூலம் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 15 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கல்லேரி பகுதியில் குலசேகரன் என்பவரின் மாந்தோப்பில் ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரியில் ரேஷன் அரிசி இருப்பதாக மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற அதிகாரிகள் தனியாக நின்றுகொண்டிருந்த லாரியில் சோதனை செய்து பார்த்ததில் சுமார் 15 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

மாவட்ட வழங்கல் அதிகாரி பானு மற்றும் பறக்கும் படை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், குடியாத்தம் வட்ட வழங்கல் அலுவலர் தேவி மற்றும் உணவு வழங்கல் (ம) குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமார் லாரி மற்றும் 15 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி குடியாத்தம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

Views: - 28

0

0