ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்…

8 September 2020, 8:53 pm
Quick Share

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பெருவாயில் பகுதியில் ஆந்திராவிற்கு நியாயவிலை கடைகளில் இருந்து வாங்கி வீடுகளில் வைத்திருக்கும் ரேஷன் அரிசி முட்டைகளை ஆந்திராவைச் சேர்ந்த நபர்கள் விலை கொடுத்து வாங்கி சரக்கு வாகனத்தில் ஏற்றி கடத்தி வருவதாக வந்த தகவலின் பேரில் கவரப்பேட்டை போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் 2 டன் ரேசன் அரிசி முட்டைகள் இருந்ததை வாகனத்துடன்
பறிமுதல் செய்தனர்.

போலீசார் அங்கு வந்ததால் அரிசி கடத்தல் கும்பல் வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடியது பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் ஒப்படைத்து அரிசி கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதைதொடர்ந்து தமிழக ரேஷன் அரிசி ஆந்திராவிற்கு கடத்தும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதே பகுதியில் இரண்டரை டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0