தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Author: Udhayakumar Raman
6 September 2021, 5:54 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் வீட்டில் சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சட்டவிரோதமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதனையடுத்து புகையிலைப் பொருட்கள் ஒழிப்பு பணியில் நகர் காவல் துறை தீவிரம் காட்டி வந்த நிலையில் வெள்ளக்கோட்டை சண்முகவேலன் தெருவில் ஒரு வீட்டில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து அங்கு சென்ற நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அங்கு மூடை மூடையாக விற்பனை செய்வதற்காக சுமார் ரூ 2,00,000 மதிப்புடைய புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. புகையிலைப்பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் போலீசார் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக முத்துராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 146

0

0