பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோவில் மாசிமகத் திருவிழா

27 February 2021, 2:50 pm
Quick Share

புதுக்கோட்டை: ஆசியாவின் மிகப்பெரிய குதிரை சிலை அமைந்துள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோவில் மாசிமகத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த குலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூரணாஅம்பாள் புஷ்கலா சமேத பெருங்காரையடி மீண்ட அய்யனார் திருக்கோவில் மாசிமக திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. ஆசியாவிலேயே மிகப்பெரிய குதிரை சிலை ஆனது சுமார் 37 அடிஉயரம் கொண்ட குதிரை சிலை இத்திருக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

இந்து சமயஅறநிலையத்துரை கட்டுபாட்டின் கீழ் இயங்கும் திருக்கோவிலாகும். மாசிமகத்தன்று நடைபெறும் திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கக்கூடிய குலமங்கலம் சுற்றுவட்டார கிராம பகுதியினர் நேர்த்திக்கடனாக சுமார் 76 அடி உயரம் காகிதம் மற்றும் துணியிலான மாலைகளை குதிரை சிலைக்கு அணிவிப்பது வழக்கமாகும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான மாசிமகம் திருவிழா மாசிமகமான இன்று தொடங்கி நாளை இரவு தெப்ப உற்சவம் முடித்து நாளை மறுதினம் விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்க்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சுரேஷ் ஆய்வளர்கள் கார்த்திகேயன், புவனேஸ்வரி, முத்துக்குமரன், பணியாளர்கள் வடிவேல்,பழம்பதி,பிரபு, சுவாமிநாதன், மற்றும் குளமங்கலம் கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Views: - 6

0

0