பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை; 3- வாலிபர்கள் கைது

22 November 2020, 1:37 pm
Quick Share

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் நாகர்கோவில் தனியார் கலைக் கல்லூரி அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோட்டார் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து எஸ்.ஐ ராபர்ட்சன் அப்பகுதியில் ரோந்து சென்றார் .அப்போது கல்லூரியில் பின்புறம் சந்தேகப்படும்படி 3 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர் .
அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் மூன்று பேரும் அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதயராஜ் (21 ), சதீஷ் (19), விக்னேஷ் (19)ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர் .பின்னர் அவர்களிடம் விற்பனைக்காக சிறுசிறு பொட்டலங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Views: - 16

0

0