திருமணம் செய்துவைக்க கோரி குடிபோதையில் இளைஞர் தர்ணா

Author: Udhayakumar Raman
20 September 2021, 8:32 pm
Quick Share

தருமபுரி: தனக்கு திருமணம் செய்துவைக்க கோரி தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் போதை இளைஞர் ஒருவர் குடிபோதையில் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.

தருமபுரி நகரின் முக்கிய பகுதியாக திகழ்வது நான்கு ரோடு சந்திப்பு. இன்று பிற்பகலில் சுமார் 33 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் திடீரென போக்குவரத்து மிகுந்த நான்கு ரோடு சாலையின் நடுவே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த எல்லப்பன் என்பது தெரியவந்தது.

அப்போது காவல் துறையினரிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அல்லது எனக்கு அரசு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் இல்லையேல் இங்கிருந்து வரமாட்டேன் என அடம் பிடித்த அந்த நபரை பொதுமக்கள உதவியுடன் அந்த இடத்தில் இருந்து அப்புறபடுத்திய பின்னரே போக்குவரத்து சீரடைந்தது. பின்னர் போதையில் இருந்த வாலிபரை காவல்துறையினர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு ரோடு சந்திப்பில் போதை வாலிபர் ஒருவர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 118

0

0