சவப்பெட்டி, பாடையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள்…

19 August 2020, 5:23 pm
Quick Share

திருச்சி: கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி திருச்சியில் வாடகை வாகன ஓட்டுநர்கள் கழுத்தில் தூக்கு கயிற்றுடன் மும்மத வழக்கப்படி சவப்பெட்டி, பாடையுடன்போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இறந்த ஓட்டுனர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், RTO சம்பந்தப்பட்ட ஆவணங்களை புதுப்பிக்க கால அவகாசம் வேண்டும், ஒட்டுநர்களுக்கு தனி வாரியம் அமைத்து தரவேண்டும், பெட்ரோல் டீசல் விலையை GST வரம்புக்குள் கொண்டு வர வேண்டும்,

EMI கால அவகாசத்தை மேலும் ஆறு மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட ஆட்டோ, டாக்ஸி, வேன் ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை திருச்சி ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் தங்களது வாகனங்களை நிறுத்தி கோரிக்கைகளை வலியுறுத்தி தூக்கு கயிற்றுடன் மும்மத வழிக்கப்படி சவப்பெட்டி பாடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Views: - 11

0

0