ஓடும் காரில் பயங்கர தீ விபத்து:அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தந்தை-மகள்

Author: kavin kumar
16 October 2021, 2:39 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் ஓடும் காரில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இருந்து தந்தை-மகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதுச்சேரி நாவற்குளம் ரத்தினவேல் நகரை சேர்ந்தவர் குல். காலாப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கடைக்கு செல்வதற்காக தனது உறவினருக்கு சொந்தமான காரை வாங்கிக்கொண்டு நேற்று மதியம் தனது மகளுடன் லாஸ்பேட்டைக்கு சென்றார். நாவற்குளம் அரசு ஆரம்பபள்ளி, மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது, திடீரென காரின் என்ஜின் பகுதியில் இருந்து புகை வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குல், காரை உடனடியாக சாலையோரத்தில் நிறுத்தி இறங்கினார். மேலும் தனது மகளையும் காரை விட்டு இறங்க வலியுறுத்தினார். அவர்கள் இறங்கிய சிறிது நேரத்தில் கார் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். தீ விபத்து ஏற்பட்டவுடன் குல் தனது மகளுடன் காரை விட்டு இறங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Views: - 255

0

0