தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்பில்லை: பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு

17 September 2020, 11:08 pm
Quick Share

தூத்துக்குடி: சட்டப்பேரவைத் தேர்தலில் தென்மாவட்டங்களில் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் பாஜக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் மண்டல பொறுப்பாளர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சமீப காலமாக தமிழக சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் நெருங்க நெருங்க பாரதிய ஜனதா கட்சியின் அலை வீசுவதால் மாற்றுக் கட்சி சார்ந்த பலர் பாரதிய ஜனதா கட்சி இணைவதாக குறிப்பிட்டார். இதைப் பார்க்கும் பொழுது வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது என்றார். தமிழகத்தைப் பொருத்தவரை பாரதிய ஜனதா கட்சி தமிழுக்குத்தான் முக்கியத்துவம் வழங்கி வருவதாக குறிப்பிட்டார் அதற்காக இந்தியை வெறுக்கவோ எதிர்க்கவும் இல்லை என்றார்.

இதை வைத்து திமுகவினர் அரசியல் பண்ணுவதாக தெரிவித்தார். தலைமை அறிவித்தால் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்றார்.ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தொகுதி அதனால் மீண்டும் அவருக்குத்தான் தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது மேலிடம் சொன்னால் தான் போட்டியிடுவேன் என்றார்.தற்பொழுது நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் தொடருகிறோம் அதனால் அதிகப்படியான தொகுதிகளை கேட்க வாய்ப்புள்ளது என்றார். தமிழகத்தில் 3வது அணிக்கு வாய்ப்பில்லை தேர்தல் நெருங்க நெருங்க தான் சேர்ந்தவர்கள் பிரிந்து போகவும் வாய்ப்புள்ளது என்றார்.

Views: - 5

0

0