வால் இல்லாமல் பிறந்த கன்றுகுட்டி ஆச்சிரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…

30 October 2020, 10:12 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே வால் இல்லாமல் பிறந்த கன்றுகுட்டியினை பொதுமக்கள் ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், இவர் 7 ஆண்டுகளாக 5 க்கும் மேற்ப்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான பசு ஒன்று இன்று நான்காவது முறையாக பெண் கன்று ஒன்றினை ஈன்றது. பசுவின் வயிற்றில் இருந்து வெளிவந்த கன்றுகுட்டியை சீனிவாசன் தூக்கிய போது அக்கன்றுகுட்டி வால் இல்லாமல் பிறந்திருப்பது தெரியவந்தது. இந்நிகழ்வினை அறிந்த அக்கம்பக்கத்தினர் அக்கன்றுகுட்டியினை ஆச்சிரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

Views: - 16

0

0