காந்தி மார்க்கெட்டை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு

25 November 2020, 11:30 pm
Quick Share

திருச்சி: காந்தி மார்க்கெட்டை திறக்ககோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அறிஞர் அண்ணா மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்கள் நலச்சங்கம் தலைவர் அறிவித்துள்ளார்.

கொரோனாவை காரணம் காட்டி காந்தி மார்க்கெட் மூடப்பட்டு 8 மாதங்கள் ஆன நிலையில் மூடப்பட்ட காந்தி மார்க்கெட்டை மீண்டும் திறக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்திவந்த நிலையில், நாளை உயர்நீதிமன்றத்தில் காந்தி மார்க்கெட்டை திறக்ககோரிய வழக்கில் விசாரணை வரவுள்ளபட்சத்தில் திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் வியாபாரம் செய்துவரும் காந்தி மார்க்கெட் மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் நேற்று இரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அறிஞர் அண்ணா மொத்தம் மற்றும் சில்லறை வணிகர்கள் நலச்சங்கம் சார்பில் அதன் தலைவர் எஸ்.பி.பாபு தலைமையில் திருச்சியில் காந்திமார்க்கெட் திறப்பு குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதன் தலைவர் எஸ்பி.பாபு பேசுகையில், “அனைத்து மூடப்பட்ட சந்தைகளும் திறக்கப்பட்டுள்ள நிலையில், காந்திமார்க்கெட் மட்டும் திறக்காதது வேதனை அளிப்பதுடன், நீதிமன்றத்தில் காந்தி மார்க்கெட்டை திறக்கக்கூடாது என தனிநபர் வழக்கு தொடர்ந்ததையடுத்து வழக்கு நிலுவையில் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் பனியிலும் மழையிலும் பாதிக்கப்படுவதுடன் விளைபொருட்கள் சேதம் அடைவது குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைத்தும் கண்டுகொள்வதாக இல்லை.

இதனால் உச்சநீதிமன்றத்தை அணுகி வழக்கு நடத்தவும், காந்திய மார்க்கெட்டை திறந்து வியாபாரம் நடத்த அனுமதி கோரி வழக்காட ஆர்டர் எண் பெற்றுள்ளதாக தெரிவித்தார். எங்களுடைய சிரமங்களை உயர் நீதிமன்றம் காதில் கொள்ளவில்லை, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எங்களது காந்தி மார்க்கெட்டை திறக்கவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் நடத்த தடைவிதிக்கப்பட்டாலும் சில்லறை வியாபாரத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், வியாபாரிகள் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதுடன், மழையின் காரணமாகவே இரண்டு நாட்கள் வியாபாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

Views: - 0

0

0