பாஜக அமைச்சர்களே பாரட்டும் அளவிற்கு சிறப்பாக திமுக ஆட்சி உள்ளது: திராவிட கழக தலைவர் கி.வீரமணி பேட்டி

Author: Udhayakumar Raman
24 October 2021, 9:08 pm
Quick Share

தருமபுரி: 150 நாட்களில் எந்த முதல்வர்களுக்கும் இல்லாத சிறப்பு மாநிலத்தின் முதல்வர்களின் முதல்வர் என்ற பெருமை பெற்ற ஆட்சி திமுக ஆட்சி என தருமபுரியில் நடைபெற்ற நூல் அறிமுக விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு ஒழிக்கபட வேண்டும் ஏன்? ஏதற்கா? ஏன்ற கருத்தரங்கமும், கற்போம் பெரியாரியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை என்கிற நூல் அறிமுக விழா மாவட்ட தலைவர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பழைப்பாளராக கலந்து கொண்ட திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நூல்களை அறிமுக படுத்தி சிறப்புரையாற்றினார். திமுக மேற்கு மாவட்ட செயலாளர் இன்பசேகரன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் கோவேந்தன் ஆகியோர் நூல்களை வெளியிட்டனர்.அதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீட் தேர்வு என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. சுட்டவிரோதமானது. உச்சநீதிமன்றத்தின் அனுமதி என்ற தவறான தகவலை பாஜக மக்களிடம் பரப்பி வருகிறது என்று கூறிய அவர்,

தமிழ்நாட்டு மாணவர்களின் ஒரு மருத்துவ கனவு ஒடுக்கபட்ட மக்கள் இனி நினைக்க கூடாது என்ற நிலையை உருவாக்கி கொண்டு ஒரு நவின ஆர்.எஸ்.எஸ். இன் கன்னி வெடி இருக்கிறது.பாஜக தலைவர் அண்ணாமலை திமுக மீதும், திமுக அமைச்சர்கள் மீதும் தொடர்ந்து அவதூராக பேசி வருவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு தமிழகத்தில் பாஜக கால் ஊன்றி வரவில்லை. மாறாக பிற கட்சிகளின் உதவியோடு தோளுன்றி வந்தது என்றும், திமுக கிள்ளு கீரை அல்ல நினைப்பதற்கு. பிரதமர் மோடி இந்தியாவை அடமானம் வைத்துள்ளார். அதனால் அண்ணாமலை அவர்கள் வட்டி முதலை பற்றி தான் பேசுவார். அதையும் பார்போம் என கூறிய அவர், திமுக ஆட்சி அமைத்த வெறும் 150 நாட்களில் எந்த முதல்வர்களுக்கும் இல்லாத சிறப்பு மாநிலத்தின் முதல்வர்களின் முதல்வர் என்ற பெருமை பெற்ற ஆட்சி தற்போதைய திமுக ஆட்சி என்றும் மத்தியில் உள்ள பாஜக அமைச்சர்களே பாரட்டும் அளவிற்கு சிறப்பாக திமுக ஆட்சி உள்ளது என்று கூறினார்.

Views: - 158

0

0