மக்கள் நலன் சார்ந்த விஷியங்களில் ஆளுநரும், முதல்வரும் இணைந்து வருவார்கள்: தமிழிசை செளந்தரராஜன் பேச்சு

Author: Udhayakumar Raman
18 October 2021, 11:38 pm
Quick Share

புதுச்சேரி: மக்கள் நலன் சார்ந்த விஷியங்களில் ஆளுநரும், முதல்வரும் இணைந்து வருவார்கள் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் மருத்துவ நட்சத்திர விருது வழங்கும் நிகழ்ச்சி, சுத்தம் சுகாதாரம் என்ற விழிப்புணர்வு தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா நோய்த்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 15 சிறந்த மருத்துவர்களுக்கு , மருத்துவ நட்சத்திரம் விருதை வழங்கி பாராட்டினார்.தொடர்ந்து விழவில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்,

மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் ஆளுநரும், முதல்வரும் இணைந்து வருவார்கள் என்றும் கொரோனா தொற்றின்போது 35 % தமிழக மக்களுக்கு புதுச்சேரியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர், தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக 3வது அலையை புதுச்சேரியில் தொடாமல் உள்ளோம் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரியில் பெரிய அளவில் கொரோனா தொற்று பாதிப்பு இருந்தது ஆனால் தற்போது 50-க்கும் கீழ் தொற்று குறைந்து வருகிறது. மேலும் குறைய வேண்டும் என்பதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது மேலும்100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாநிலமாக புதுச்சேரி மாநிலம் திகழ வேண்டும் எனவும் பேசினார்.

Views: - 162

0

0