ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டுத் தரக் கோரி காலக்டரிடம் பெண் புகார்

2 March 2021, 5:31 pm
Quick Share

மதுரை: ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார்.

மதுரை சிட்டம்பட்டி அருகே பூலாம்பட்டியை சேர்ந்தவர் நாகலட்சுமி. இவரது கணவர் புத்திசிகாமணி, 2007இல் இறந்துவிட்டார். மகன் டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்த இவரது மகனும்ம் 2014ல் தனியார் பஸ் மோதிய விபத்தில் இறந்தார். இவரது வீட்டிற்கு அருகில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்துக் கொண்டு இடையூறு செய்வதாக கலெக்டர் அன்பழகனிடம் புகார் அளித்தார். அவரது புகாரில் கூறியிருப்பதாவது: எனக்கு பூலாம்பட்டியில் சொந்தமான வீடு உள்ளது. அதன் அருகில் உள்ள எங்களுக்கு சொந்தமான காலியிடத்தை அதே பகுதியை சேர்ந்த மச்சக்காளை, ரவிச்சந்திரன், சின்னையா ஆகியோர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.

இடத்தை காலி செய்து கொடுக்கும்படி மாவட்ட எஸ்.பி.,யிடமும், ஒத்தக்கடை காவல் நிலையத்திலும் புகார் அளித்தும், அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து 2019 உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மூவரும் சேர்ந்து என்னை வீட்டை விட்டு வெளியே வர முடியாத வகையில் வேலி அமைத்து எனக்கு இடையூறு செய்கின்றனர். அதே போல் அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகில் எனது கணவருக்கு சொந்தமான 1.7 சென்ட் இடம் உள்ளது. அதனையும் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். எனவே அந்த இடங்களை காலி செய்து எனக்கு பெற்றுத் தர வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

Views: - 8

0

0