திருச்சியில் கொலை செய்யப்பட்டவர் அஞ்சலி போஸ்டர்: விரைவில் என்ற வாசகம் பீதியில் பொதுமக்கள்

Author: Udhayakumar Raman
17 September 2021, 2:27 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் கொலை செய்யப்பட்டவருக்காக ஒட்டப்பட்டிருந்த அஞ்சலி போஸ்டரில் விரைவில் என்ற வாசகம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியில் நேற்று இரவு சிண்டு என்கிற சின்ராஜ்(24) என்பவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து உடலை கைப்பற்றிய பொன்மலை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட விசாரணையில், பொன்னேரிபுரத்தை சேர்ந்த அலெக்ஸ், மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த சரத் உள்ளிட்ட நபர்கள் இந்த கொடூரத்தை செய்தது தொிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அந்த நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட சின்ராசுவின் உடல் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் வெட்டிக் கொல்லப்பட்ட சின்ராசுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரு இறந்தாலோ அல்லது வெட்டிக் கொலை செய்யப்பட்டாலோ இதுபோல் அஞ்சலி சுவரொட்டி ஒட்டுவது வழக்கம். ஆனால் இந்த சுவடியின் இறுதி வரியில் முடிவில் விரைவில் என்ற வாசகம் இடம் பெற்று உள்ளது. விரைவில் என்ற வாசகம் நான் பகுதியில் மீண்டும் பழிக்குப்பழியாக நிகழ்ச்சி நடைபெறுவதற்கான எச்சரிக்கை என்று சூசகமாக சொல்லப்பட்டத பகுதி மக்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளது. தற்போது விரைவில் என்ற இந்த வாசகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 183

0

0