சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 பேர் கைது : ரூ.43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல்!!
17 August 2020, 7:30 pmதிருச்சி : லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் அனுமதியின்றி சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 43 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே எசனைக்கோரை ஊராட்சியில் உள்ள அய்யன் வாய்க்கால் பகுதியில் ஐயப்பன் தோப்பில் அனுமதியின்றி சேவல் சண்டை நடைபெறுவதாக சமயபுரம் காவல் உதவி ஆய்வாளர் மாரிமுத்துவுக்கு தகவல் கிடைத்தது.
அங்கு போலீசார் சென்றபோது, சேவல் சன்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த தர்மராஜ்(வயது 35) திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த அசோக்(வயது 23), திருச்சி வடக்கு காட்டூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 60), லால்குடி மிஷின் சந்து பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 30), ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்த ரூ. 43,310 ரொக்கம், 6 இரு சக்கர வாகனம், ஒரு ஓம்னி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அனைவர் மீதும் உதவி ஆய்வாளர் மாரிமுத்து வழக்கு பதிந்து , காவல்நிலைய பினையில் விடுவித்தனர்.
0
0