ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி: 4 பேர் படுகாயம்…

23 September 2020, 7:46 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சங்கரன்கோவில் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மடவார்வளாகம் என்ற பகுதியில் மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகலில் சங்கரன்கோவிலில் இருந்து கோயமுத்தூர் சென்ற காரும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வன்னியம்பட்டி சென்ற ரேஷன் கடை லாரியும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த செய்யது அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவருடன் காரில் பயணம் செய்த ஜமீலா, அசன் உள்ளிட்ட இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்த நான்கு பேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தபோது அவர்களின் உறவினர்கள் வேண்டிக் கொண்டதால் ராஜபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக 4 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.

Views: - 7

0

0