மீண்டும் இரு கிராமங்களுக்கு இடையே மோதல்: போலீசார் துப்பாக்கி சூடு

Author: kavin kumar
29 August 2021, 4:53 pm
Quick Share

புதுச்சேரி: சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன் பிடிப்பதில் புதுச்சேரியில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மீண்டும் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்ப்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து போலீசார் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்தி மோதலை தடுத்தனர்.

புதுச்சேரியில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை உள்ள போதிலும் சில மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி நடுக்கடலில் இன்று 50 க்கும் மேற்பட்ட நல்லவாடு மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது வீராம்பட்டினம் மீனவர்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நடுக்கடலில் இரு தரப்பினருக்கிமிடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து கரையிலும் இரு கிராம மீனவர்களை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுளுக்கி, கல், உருட்டு கட்டைகளுடன் ஒருவரை ஒருவர் தக்கிக்கொண்டனர். அப்போது சம்பவ இடத்தில் இருந்த போலீசார் மோதலை தவிர்க்கும் வகையில் வானத்தை நோக்கி இரு முறை துப்பாக்கியல் சுட்டு கூட்டத்தை கலைத்தனர்,

இந்நிலையில் வம்பாகீரபாளையத்தை சேர்ந்த மீனவர்கள் நல்லவாடு மீனவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலில் படகை எடுத்து கொண்டு வம்பாகீரபாளையம் மீனவர்களை தாக்க சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இரு கிராம மீனவர்களும் கரையில் நின்று கொண்டு ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மீனவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தியும், அவர்கள் செல்லாத காரணத்தினால் வானத்தை நோக்கி 12 முறை துப்பாக்கியால் சூட்டு அவர்களை கலைந்து போக செய்தனர், மேலும் மீனவ கிராம பகுதிகளில் 300 க்கும் மேற்ப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர், மீண்டும் இரு வேறு கிராம மீனவர்களுக்கு இடையே மோதல் ஏற்ப்பட்டும் சூழல் ஏற்ப்பட்டதால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Views: - 204

0

0