இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட மூன்று பேர் கைது

3 September 2020, 10:57 pm
Quick Share

கோவை: கோவையில் இரு சக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட இரு சிறார்கள் உட்பட மூவர் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் ராமநாதபுரம் ஆறுமுக நகர் பகுதியை சேர்ந்த காஷ்மீர் லாரன்ஸ் (50) என்பவர் தனது மனைவியுடன் நின்று கொண்டு இருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களில் பின்னால் அமர்ந்து வந்த நபர் அவரது மனைவியிடம் இருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த காஷ்மீர் லாரன்ஸ் மனைவி கூச்சலிட அருகில் இருந்த பொதுமக்கள் செல்போனை திருடி தப்பிக்க முயன்ற நபர்களை பிடிக்க முயன்றபோது வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பினார்.

மற்றொருவர் மாட்டி கொள்ள அந்த நபரை பொதுமக்கள் பந்தய சாலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரனையில் அந்த நபருக்கு 17 வயது என்பதும், உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் எனவும், வாகனத்தை ஓட்டி வந்த நபருக்கு 16 வயது வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரியவந்தது. மேலும் போலீசார் விசாரணையில், இவர்களது கூட்டாளியான சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கு திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இவர்களுடன் இருந்து மூன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யபட்டது. இவர்கள் பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் எனவும் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மூவர் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர் சிறார்கள் இருவரும் சிறுவர் சீர் திருத்த பள்ளியிலும், நாகராஜ் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Views: - 0

0

0