கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களை அரசு முறை அடக்கம் செய்ய வலியுறுத்தல்

20 September 2020, 1:56 pm
Quick Share

ஈரோடு: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈரோட்டில் கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்த இந்திய மருத்துவர் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர்.ராஜா, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் நாளுக்கு நாள் மருத்துவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும்,உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றும் அரசை கேட்டுக்கொண்டார்.

ராணுவ வீரர்கள் உயிரிழந்தால் அரசு மரியாதை வழங்குவது போல மருத்துவர்களை அரசு முறை அடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், பொதுமுடக்கத்தை நீட்டிப்பு செய்ய வேண்டாம், தனி மனிதர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றார். மருத்துவமனைகளும் மருத்துவர்களும் தாக்கப்படுவது கண்டிக்கதக்கது என கூறிய ராஜா, சட்டம் வலிமையாக்க வேண்டும் என்றார்.