இரண்டாம் நிலை காவலர் தேர்வில் பல்வேறு முறை கேடுகள்: நடவடிக்கை எடுக்க கோரி பெண் தற்கொலை முயற்சி

Author: kavin kumar
23 August 2021, 6:28 pm
Quick Share

தருமபுரி: கடந்த 2008-2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றும், இதுவரை பணிவழங்காத காவல்துறையை கண்டித்தும் இத்தேர்வில் நடைபெற்ற பல்வேறு முறை கேடுகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால்பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேடியப்பன் என்பவர் கடந்த 2008 2009 இல் நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் உடல் தகுதி தேர்வுக்கு அழைப்புக் கடிதம் வந்தது. அதிலும் கலந்துகொண்டு உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர் கட்டாப் முடிவுகள் அற்விக்கும் பொழுது அதில அவரது பெயர் இடம் பெறவில்லை. இதனால் தான் நல்ல முறையில் தேர்வு எழுதியும் தனது பெயர் வரததாதல் அதிர்ச்சி அடைந்தார். அதனை அடுத்து ஓஎம்ஆர் சீட் வழங்கும்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய குடும்பத்திற்கு மனு அனுப்பியிருந்தார்.

அதில் சரியான பதில்கள் கொடுக்கப் படாததால் மீண்டும் ஆர்டிஐ மூலம் மனு போட்டு கேட்கும்பொழுது வேடியப்பனை விசாரணைக்கு தகவலறியும் ஆணையத்தில் வரவழைக்கப்பட்டார். விசாரணையில் கேட்கப்பட்ட பதிலுக்கு ஆர்டிஐ மூலம் தவறான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகமாக மன உளைச்சல் ஏற்பட்டு, அனைத்து தகுதியும் உள்ள தனக்கு உரிய பணி வழங்க வேண்டியும், காவலர் தேர்வில் நடை பெற்ற முறைகேடுகள் குறித்தும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை மூலம் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர்,

காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் கடந்த 10 ஆண்டுகளாக பல முறை மனு அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து இன்று வேடிய்ப்பனின் மனைவி மோகனா தனது கணவருக்கு உரிய நீதி வழங்ககோரி மாவட்ட ஆட்சியர் அலுவலக மேல் மாடியில் இருந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றபோது அதனை கன்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் விரைந்து சென்று தடுத்து நிருத்தினர். அதனை அடுத்து வேடியப்பன் மற்றும் அவரது மனைவி மோகனாவை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Views: - 242

0

0