வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி தருமபுரி வருகை : செல்பி எடுத்து மகிழ்ந்த பொதுமக்கள்

Author: kavin kumar
11 February 2022, 8:16 pm
Quick Share

தருமபுரி : தருமபுரிக்கு வந்துள்ள வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தியை ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டு, செல்பி எடுத்து கொண்டனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுப்படி, விடுதலை போரில் தமிழகம்” தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையில் வீரமங்கை வேலு நாச்சியார் அலங்கார ஊர்தி மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் பார்வைக்கு சென்று வருகிறது. இந்த ஊர்தி நேற்று தருமபுரி மாவட்டத்திற்கு வந்தது. இந்த அலங்கார ஊர்தியினை தருமபுரி மாவட்ட எல்லையான தொப்பூர் சுங்கசவடியில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி வரவேற்றனர். அதனைத் தொடந்து தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்தியை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.

இன்று இரண்டாவது நாளில் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊர்தியை பார்வையிட அழைத்து வந்தனர். இதனை காண வந்த மாணவர்கள் ஊர்தி முன்பு நின்று போட்டோ எடுத்து கொண்டனர். மேலும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் ஆர்வமாக கண்டு ரசித்தும், புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் ஊர்தியின் அருகே தமிழர்களின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் தற்காப்பு பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மல்லர் கம்பம் ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினர். தொடர்ந்து சாகச நிகழ்ச்சிகள் கண்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

Views: - 725

0

0