ஆக்சிஜன் சிலிண்டர்களை நன்கொடையாக வழங்கிய தன்னார்வலர்கள்

22 June 2021, 10:33 pm
Quick Share

கோவை: கொரோனா சிகிச்சைக்காக 25லட்சம் ரூபாய் மதிப்பிலான 105 ஆக்சிஜன் சிலிண்டர்களை தன்னார்வலர்கள் நன்கொடையாக வழங்கினார்.

கொரோனா இரண்டாம் அலை பரவலில் அதிகளவிலானோர் ஆக்ஸிஜன் குறைபாட்டால் உயிரிழந்தனர். இதனையடுத்து நாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பல்வேரு தன்னர்வலர்கள் பொதுநல அமைப்புகள் ஆக்சிஜன் சிலிண்டர்களை அரசு மருத்துவமனை மற்றும் கொரனா சிகிச்சை மையங்களுக்கு நன்கொடையாக வழங்கினர். இந்நிலையில் கோவையில் இன்போசிஸ் அறக்கட்டளை, இன்ஸ்பயர் பொதுநல அமைப்பு மற்றும் தி ஃபிஸ் பீப்பிள் என்ற தனியார் பொதுநல அமைப்புகள் இணைந்து ரூ.25லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் நிரப்பி பயன்படுத்தும் 105 சிலிண்டர்களை கோவை மாவட்ட ஆட்சியரிடம் நன்கொடையாக வழங்கினர்.

இதனை பெற்று கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் தன்னார்வலர்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இது தொடர்பாக பேசிய இன்ஸ்பயர் பொதுநல அமைப்பின் நிர்வாகி ரேவதி, புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தேவை இருப்பதையடுத்து மீண்டும் மீண்டும் ஆக்சிஜன் நிரப்பி பயன்படுத்தும் வகையிலான 105 சிலிண்டர்களை வழங்கியுள்ளதாகவும், இது புறநகர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் பயன்பாட்டுக்கு வரும்போது கிராமப்புற மக்கள் மிகவும் பயனடைவர் என தெரிவித்தார்.

Views: - 79

0

0