மகளிர் சுய உதவி குழுவினரை கடன் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது: நிறுவனங்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை

12 June 2021, 8:33 pm
Quick Share

வேலூர்: வேலூரில் மகளிர் சுய உதவி குழுவினரை கடன் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்றும், தரம்குறைவாக நடத்தினாலோ, அரஜக போக்குடன் நடந்துகொண்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு மாநில ஊரக, நகர்புற வாழ்விதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் வங்கிகள், தனியார் வங்கிகள், நுண்நிதி நிறுவனங்கள், வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில், கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தியாவசிய தேவைகளுக்காக மகளிர் சுயஉதவி குழுவினர் கடன் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடன் கொடுத்த நிறுவனங்கள் கடனை திரும்ப கேட்டு வற்புறுத்துவதாகவும், மிரட்டல் விடுவதாகவும் தொடர்ந்து புகார்கள் வருகிறது. ஆகையால் இனி வரும் காலங்களில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் கொடுத்த நிறுவனங்கள் கடன் வசூலிக்க ரிசர்வ் வங்கி வகுத்த நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். மாறாக தொந்தரவு செய்யவோ, தரம்குறைவாக நடத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. மேலும் அராஜக போக்குடன் செயல்படும் நுண்கடன் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

Views: - 426

0

0