மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

12 September 2020, 2:54 pm
Quick Share

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபோதையில் இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று மரத்தில் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தையடுத்தார். மேலும் ஒரு இளைஞர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த வைரபிரகாஷ் மற்றும் வேல்பாண்டி ஆகிய 2 இளைஞர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள செண்பகத்தோப்பு பகுதியில் குளித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மது போதையில் இருந்த இருவரும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தைலாகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மரத்தின் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த வைரபிரகாஷ் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற வேல்பாண்டி என்ற இளைஞர் ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து மல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 6

0

0