இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இளைஞர்கள் கைது: 2.100 கி.கிராம் கஞ்சா பறிமுதல்

16 July 2021, 3:57 pm
Quick Share

விருதுநகர்: சாத்தூரில் தேசிய நெடுஞ்சாலை வாகன சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய இரு இளைஞர்களை சாத்தூர் போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 2.100 கி.கிராம் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கடாசலபுரம் அருகேயுள்ள சோதனைச்சாவடியில் சாத்தூர் டவுன் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து சாத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை செய்தனர். விசாரணையில் இவர்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புத்தூர் பகுதியை சேர்ந்த இசக்கி ராஜ், தாமோதர கண்ணன் என்பது தெரியவந்தது. இதில் இசக்கிராஜ் இன்ஜினியரிங் பட்டதாரி என்பதும் தெரியவந்தது. அவர்கள் இருவரிடமிருந்து 2.100 கி.கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா கடத்தி வந்தது தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 143

0

0