3 மாவட்டங்களில் தொடங்கியது பறவைகள் கணக்கெடுப்பு பணி: 110 தன்னார்வலர்கள் பங்கேற்பு..!!

30 January 2021, 4:14 pm
birds population - updatenews360
Quick Share

நெல்லை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இன்று பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணியில் மொத்தம் 110 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கூந்தங்குளம், விஜய நாராயணம், நயினார்குளம், மானூர் பெரிய குளம், தென்காசி மாவட்டத்தில் வாகைகுளம், துப்பாக்குடி குளம், தூத்துக் குடி மாவட்டத்தில் கடம்பா குளம், பெருங்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு வெளிநாட்டு பறவைகள் சீசன் காலங்களில் அதிகளவில் வரும். இந்த பறவைகளை கணக்கெடுக்கும் பணி கடந்த 2011ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு தாமிரபரணி நீர் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 3 மாவட்டங்களிலும் நேற்று தொடங்கியது. இந்த பணி நாளை வரை நடைபெறுகிறது. இந்த பணியினை அகத்திய மலை மக்கள் சார் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கை சங்கம், முத்துநகர் இயற்கை சங்கம், மாவட்ட அறிவியல் மையம் இணைந்து நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முன்னீர் பள்ளத்தில் நேற்று கணக்கெடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இதனை உதவி வன பாதுகாவலர் ஹேமலதா தொடங்கி வைத்தார். ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

இன்று நெல்லை வேய்ந்தான்குளத்தில் கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இதனை தாமிர பரணி நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் தொடங்கி வைத்தார். பறவைகள் கணக்கெடுப்பு பணியில் மொத்தம் 110 தன்னார்வலர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டு உள்ளனர். அவர்கள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு நெல்லை, வள்ளியூர், களக்காடு, அம்பை, தென்காசி, குரும்பூர், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி ஆகிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு குழுவிலும் பறவைகள் குறித்து அறிந்த நிபுணர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் நீர்வாழ் பறவைகள் குறித்த வண்ணப்புகைப்பட குறுங்கையேடு வழங்கிப்பட்டுள்ளது. 2 நாட்களில் சுமார் 50 குளங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பில் தன்னார்வலர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.

Views: - 1

0

0