சசிகலாவுக்கு கொரோனா? மருத்துவமனை டீன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!

20 January 2021, 7:35 pm
Sasikala Corona - Updatenews360
Quick Share

பெங்களூரு : சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன் அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Sasikala - Today Jaffna News - Jaffna Breaking News 24x7

இந்த நிலையில் அபராத தொகையை சசிகலா செலுத்திய நிலையில், அவருடைய தண்டனை காலம் வரும் 27ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அவர் அதிகாரப்பூர்வமாக வரும் 27ஆம் தேதி வெளியாகிறார் என கர்நாடக சிறைத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

VK Sasikala Health Issue: பெங்களூரு சிறையில் சசிகலாவிற்கு திடீர்  மூச்சுத்திணறல்... மருத்துவகுழுவினர் சிகிச்சை | Sasikala unwell in Bangalore  jail Medical team treatment - Tamil ...

இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சிறைக்கு மருத்துவக்குழு விரைந்து சென்று சிகிச்சை அளித்தனர், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானதாக தகவல் வெளியானது. சசிகலாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதியானதாக மருத்துவமனை டீன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Majority of MLAs with Sasikala: AIADMK spokesperson - The Statesman

ஏற்கனவே சசிகலாவுக்கு நீரிழிவு நோய், மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் சசிகலா விடுதலையாக உள்ள நிலையில் உடல்நலக்குறைவு பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 5

0

0