உலக எய்ட்ஸ் தின உறுதியேற்பு நிகழ்ச்சி..

1 December 2020, 3:06 pm
Quick Share

கோவை: கோவையில் நடைபெற்ற உலக எய்ட்ஸ் தின உறுதியேற்பு நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டு உறுதியேற்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதியன்று உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கபட்டு வருகிறது. அந்நாளில் எய்ட்ஸ் நோய் பரவல், பாதுகாப்பு மூறை மற்றும் எய்டஸ் நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எய்ட்ஸ் நோய் தடுப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, அலுவலர்கள் உறுதி மொழியேற்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, கோவை மாவட்டத்தில் எய்ட்ஸால் 4000 பேர் பாதிக்கபட்டு மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் சிகிச்சை அளிக்கபட்டு தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர்.

இதில் ஆண்கள் 2000 பேரும், பெண்கள் 1800 பேரும் 200 குழந்தைகள் அடங்குவர் என தெரிவித்தவர் தமிழக அரசு மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் எடுக்கபட்டு வரும் எய்ட்ஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக எய்ட்ஸால் பாதிக்கபடுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவருவதாகவும் தெரிவித்தார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுறை முருகன், மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Views: - 0

0

0