சர்வதேச தீவிரவாத நிதி ஆதாரம் : உலக நாடுகள் ஒன்றுபட்டு தடுக்க இந்தியா வலியுறுத்தல்

8 November 2019, 11:46 am
EG-UPDATENEWS360
Quick Share

சர்வதேச அளவில், தீவிரவாத அமைப்புகளுக்கான நிதி ஆதாரத்தை, திரட்டும் அமைப்புக்களுக்கு, முற்றிலும் எதிரான நடவடிக்கைகளில், உலக நாடுகள் ஒன்றுபட்டு, ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய சரியான நேரம் இது தான் என்றும் இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

சர்வதேச அளவில்,”தீவிரவாதத்துக்கு நிதி இல்லை” என்கின்ற தலைப்பில், மாநாடானது, ஆஸ்திரேலிய தலைநகரான மெல்போர்னில் நடத்தப்பட்டது. தீவிரவாத இயக்கங்களுக்கான நிதி கிடைப்பதைத் தடுப்பதற்காக, இந்தியா உள்பட 100-க்கும் மேலான நாடுகளைக் கொண்டு, “எக்மோன்ட் குழு”, என்கின்ற ஒரு சர்வதேச அமைப்பானது, 1995-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டிருந்தது. “எக்மோன்ட் குழு”-வின் நாடுகளை சேர்ந்த, ‘நிதி நுண்ணறிவுப் பிரிவுகள்’ சார்பிலான மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இம்மாநாட்டில், இந்தியா நாட்டின் சார்பில், மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி கலந்து கொண்டார்.

தீவிரவாத தடுப்பு நடவடிக்கைக்காக, ‘நிதி நுண்ணறிவு பிரிவுகள் ‘ சார்பில் நடத்தப்பட்ட மாநாட்டில், இந்திய நாட்டின் மத்திய உள்துறை இணை அமைச்சரான, கிஷன் ரெட்டி அவர்கள் கலந்து கொண்டு பேசும் போது, பாகிஸ்தான் நாட்டின் பெயரை குறிப்பிடாமல், மறைமுகமாக விமர்சனம் செய்தார். கிஷண் ரெட்டி தமது தீவிரவாத தடுப்பு பணிக்கான,’நிதி நுண்ணறிவு பிரிவுகள் ‘ மாநாட்டில் பேசும்போது, தீவிரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுப்பதற்கான முயற்சியினை சர்வதேச அளவிலான நாடுகளின் இணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், உலகின் சில நாடுகள் மட்டும், தீவிரவாத செயல்களுக்கு மறைமுக ஆதரவு அளிப்பது என்ஜரா நிலையானது மிகவும் கவலையளிப்பதாகவும், இந்தியாவின் மத்திய உள்துறைக்கான இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

மேலும் அவர் தனது உரையில், உலகெங்கிலும், தீவிரவாத அச்சுறுத்தலை ஒரு போதும் சகித்துக் கொள்ள இயலாது என்றும், இந்திய நாட்டிற்கு, எல்லை தாண்டிய தீவிரவாத செயல்களால் பெரும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக தீவிரவாத செயல்களினால் இந்திய நாடானது கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், சர்வதேச பரந்துபட்ட அளவில், தீவிரவாத செயல்களை ஆதரிக்கும் நாடுகள், தீவிரவாத செயல்களுக்கான நிதி ஆதாரத்தை உலக அளவில் திரட்டுகின்ற அமைப்புக்கள் என்றும், இருக்கின்ற ஆபத்துக்களுக்கு எதிராக, உலக நாடுகள் ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த இந்தியாவின் மத்திய உள்துறைக்கான, இணையமைச்சர் கிஷன் ரெட்டி அவர்கள், ,’நிதி நுண்ணறிவு பிரிவுகள் ‘ மாநாடானது, வரும் ஆண்டில், இந்தியாவில் நடத்தப்படும் என்றும் கிஷண் ரெட்டி தெரிவித்தார்.

Leave a Reply