மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் பலி? ஆப்கானில் தொடரும் அட்டூழியம்!!
Author: Udayachandran RadhaKrishnan8 October 2021, 6:36 pm
ஆப்கானிஸ்தான் : குந்தூஸ் அருகே மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
தலிபான்கள் கைப்பற்றிய பின் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பில் 5க்கும் மேற்பட்ட கொல்லப்பட்டனர். இதே போல கடந்த மாதம் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இனறு ஆப்கானிஸ்தான் குந்தூஸ் மாகாணத்தில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 100 பேர் உயிரிழந்தனர்.
தொழுகையில் ஈடுபட்டிருந்த 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர் எனவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் 50-க்கும் மேற்பட்டோர் சிகிக்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
0
0