சீனாவின் மழை வெள்ளத்தில் இதுவரை 15 பேர் பலி: 3 மாயம்

Author: Udhayakumar Raman
13 October 2021, 9:44 pm
Quick Share

சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் மழை வெள்ளத்தில் இதுவரை 15 பேர் பலியானதாகவும், 3 மாயமாகி இருப்பதாகவும் மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்தது. இதனால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை வெள்ளத்தினால் அங்கு 17.6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1.20 லட்சம் பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். சுமார் 1. 8 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதில் 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மேலும் இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 2 லட்சத்து 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகின.

நேற்றைய நிலவரப்படி மழை, வெள்ளத்தினால் ஷான்சி மாகாணத்தில் சுமார் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மழை, வெள்ளத்தினால் இதுவரை 15 பேர் பலியானதாகவும், 3 மாயமாகி இருப்பதாகவும் மாகாண அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி இந்த இயற்கை பேரிடரால் 780 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழுவீச்சில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 156

0

0