நார்வேயில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 பேர் உயிரிழப்பு : மருத்துவர்கள் அதிர்ச்சி
16 January 2021, 6:29 pmபைசர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டதால், பக்கவிளைவுகள் ஏற்பட்டு 23 பேர் உயிரிழந்த சம்பவம் நார்வேயில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தை தடுக்க பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்து அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதித்து வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசியை உலகின் பல்வேறு நாடுகள் கொள்முதல் செய்து, நாட்டு மக்களுக்கு செலுத்தி வருகின்றன.
அப்படி, கொள்முதல் செய்த நாடுகளில் ஒன்று நார்வே. இந்த நாட்டில் இதுவரையில் 33 ஆயிரம் பேருக்கு பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் 29 பேர் பக்க விளைவு பாதிப்பாலும், 23 பேர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் இறந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பைசர் தடுப்பூசி போட்டு இறந்த அனைவருமே 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து நார்வே நாட்டின் மருத்துவ நிறுவன இயக்குனர் ஸ்டெய்னர் மேட்சன் கூறுகையில், “நோய்வாய் பட்ட முதியவர்களுக்கே பக்கவிளைவுகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, தடுப்பூசி செலுத்திய பிறகு இறந்தவர்கள் குறித்து நாங்கள் அதிகம் கவலைப்படவில்லை. நோய்வாய்ப்பட்ட சிலரைத் தவிர மற்றவர்களுக்கு இந்த தடுப்பூசியால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0