நியூயார்க்கில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 வீரர்கள் பலி..!!

21 January 2021, 11:10 am
newyork flight crash - updatenews360
Quick Share

நியூயார்க்: நியூயார்க் நகரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் தேசிய பாதுகாப்பு படையின் வீரர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, வீரர்களின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.

இந்த தீ விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்களும் உயிரிழந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வீரர்களின் மறைவு குறித்து வேதனை தெரிவித்த நியூயார்க் கவர்னர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் வீரர்களின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், அரசு அலுவலக கட்டிடங்களில் தேசியக்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் கவர்னர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0