அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வெள்ளைக்கொடிகளால் பிரம்மாண்ட நினைவுச் சின்னம்…!!

24 October 2020, 1:59 pm
us falg - updatenews360
Quick Share

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரம்மாண்ட நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் இதுவரை 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கைக்கு சமமாக சிறிய அளவிலான வெள்ளை கொடிகளை நட்டு, சுசேன் ப்ரென்னன் ஃபர்ஸ்டன்பெர்க் என்ற கலைஞர் பிரம்மாண்ட நினைவு சின்னத்தை உருவாக்கியுள்ளார்.

வாஷிங்டன் ஆயுத அணிவகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட நினைவுச்சின்னத்தை, அடுத்த மாதம் 6ம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Views: - 26

0

0