‘அவர் இருப்பது மட்டும் தெரிந்திருந்தா..’ டேனிஷ் சித்திகி மரணத்திற்கு வருத்தம் தெரிவித்த தலிபான்கள்…!!

17 July 2021, 8:02 pm
daniesh siddiqui - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திகி உயிரிழந்த சம்பவத்திற்கு தலிபான்கள் வருத்தமும், மன்னிப்பும் கோரியுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான் அமைப்பினருக்கும் இடையே நடந்து வரும் மோதலை படம்பிடிக்கும் இந்திய குழுவில் மூத்த புகைப்பட கலைஞரான டேனிஷ் சித்திகியும் இடம்பெற்றிருந்தார். இருதரப்பினரிடையேயான தாக்குதலில் கடந்த 13ம் தேதி நூலிழையில் உயிர்தப்பியதாக டேனிஷ் சித்திகி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஆனால்,கடந்த வியாழக்கிழமை இரவு தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சித்திகி பரிதாப உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவரது மறைவிற்கு தலிபான் அமைப்பினர் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “மோதல் நடந்த பகுதியில் பத்திரிக்கையாளர்கள் இருந்தது தங்களுக்கு தெரியாது. பத்திரிக்கையாளர்கள் இருப்பதை முன்கூட்டியே எங்களுக்கு தெரியப்படுத்தி இருந்தால் மட்டுமே, இதுபோன்ற சமயங்களில் அவர்களை பாதுகாக்க முடியும்,” எனக் கூறியுள்ளனர்.

Views: - 298

0

0