பணவீக்கத்திற்கு காரணம் பாகிஸ்தான் அரசா..? 49% மக்கள் கூறுவது இப்படித்தான்..!

15 November 2020, 3:19 pm
imran_khan_updatenews360
Quick Share

நாட்டில் பணவீக்கத்திற்கு பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கமே காரணம் என்று பாகிஸ்தான் மக்களில் குறைந்தது 49 சதவீதம் பேர் நம்புகிறார்கள் என்று ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.

இப்சோஸின் புதிய கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்கள் விலை உயர்வு பாகிஸ்தானில் உள்ள அனைத்து வகுப்புகளையும் பாதித்துள்ளது என்றும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்புகள் இதனால் மிகவும் பாதிக்கப்படுகின்றன எனத் தெரிய வந்துள்ளது.

அக்டோபர் 28 முதல் நவம்பர் 4 வரை நடத்தப்பட்ட ஆய்வில், பாகிஸ்தானியர்களில் பாதி பேர் பணவீக்கத்திற்கு இம்ரான் கான் அரசைக் குறை கூறுகின்றனர்.

பதிலளித்தவர்களில் 15 சதவீதம் பேர் மட்டுமே இதற்கு முந்தைய அரசாங்கங்களை குற்றம் சாட்டியதாக ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பி.டி.ஐ மற்றும் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் ஆட்சியில் இருந்த முதல் நாளிலிருந்து முந்தைய அரசாங்கங்கள் தான் அனைத்திற்கும் காரணம் என நிறுவ முயற்சிப்பது குறிப்பிடத்தக்கது.

நாற்பத்தொன்பது சதவிகிதத்தினர் இந்த நெருக்கடிக்கு மத்தியில் ஆளும் இம்ரான் கான் அரசாங்கமே பொறுப்பு எனத் தெரிவித்துள்ளனர். 17 சதவிகிதத்தினர் மாகாண அரசாங்கங்களை பொறுப்பாளர்களாகக் கருதினர். 8 சதவிகிதத்தினர் மட்டுமே மாஃபியாவைக் குற்றம் சாட்டினர்.

பணவீக்கத்திற்கு பொறுப்பாக மத்திய அரசைக் கருத்தில் கொண்டவர்களின் விகிதம் பலூசிஸ்தானில் மிக 59 சதவீதம் என மிக உயரிய அளவில் உள்ளது. அதன்பின்னர் கைபர் பக்துன்க்வா 58 சதவீதம், பஞ்சாபில் 46 சதவீதம் மற்றும் சிந்துவில் 44 சதவீதமாக உள்ளது.

பதிலளித்தவர்களில் 97 சதவீதம் பேர் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கணக்கெடுப்பின்படி, 5 ல் 4 பாகிஸ்தானியர்கள் (83 சதவீதம்) கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தங்கள் வருமானத்தில் வெட்டுக்களை எதிர்கொண்டதும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

Views: - 29

0

0

1 thought on “பணவீக்கத்திற்கு காரணம் பாகிஸ்தான் அரசா..? 49% மக்கள் கூறுவது இப்படித்தான்..!

Comments are closed.