“அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டால் உரிய விலை கொடுக்க நேரிடும்”..! ஜோ பிடென் உறுதி..!

23 October 2020, 5:36 pm
Joe_Biden_UpdateNews360
Quick Share

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் நவம்பர் 3 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க தேர்தல்களில் தலையிடும் எந்தவொரு நாடும் உரிய விலை கொடுக்க வைப்பேன் என்று எச்சரித்துள்ளார். 

குறிப்பாக சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் அமெரிக்க தேர்தலில் தலையிடுவதாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு நாஷ்வில்லில் உள்ள பெல்மாண்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான இறுதி ஜனாதிபதி விவாதத்தின் போது அமெரிக்க தேர்தல்களில் வெளிநாட்டு தலையீட்டை எவ்வாறு தடுப்பது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது பிடென் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

“நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்கள் உரிய விலை கொடுப்பார்கள்” என்று பிடன் கூறினார்.

“அவர்கள் அமெரிக்க இறையாண்மையில் தலையிடுகிறார்கள். அதுதான் நடக்கிறது” என்று ரஷ்யாவும் ஈரானும் தேர்தலில் கணிசமாக தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கைகள் குறித்து கேட்டபோது அவர் கூறினார்.

அண்மையில் நடந்த தேர்தல் குறுக்கீடு முயற்சிகள் குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாகவும், தான் அதுகுறித்து முழுமையாக அறிந்துள்ளதாகவும் டிரம்ப் கூறினார்.

தேர்தலில் தலையிடும் முயற்சியில் ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டும் அமெரிக்க வாக்காளர் பதிவு தகவல்களைப் பெற்றுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் இந்த வாரம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி டிரம்பிற்கு வாக்களிப்பவர்களை மிரட்டுவதை நோக்கமாகக் கொண்டு கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் நடக்கும் மின்னஞ்சல் பிரச்சாரத்தின் பின்னால் ஈரான் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Views: - 0

0

0