இப்ப இது தேவையா? அரண்மனையை அழகுபடுத்த எவ்வளவு செலவு செஞ்சிருக்காரு பாருங்க!

13 January 2021, 8:28 am
Quick Share

கொரோனா தொற்று காலத்தில், பிரான்ஸ் அதிபரும், அவர் மனைவியும் சேர்ந்து கொரோனா காலத்தில், அரண்மனையை அழகுபடுத்த பணத்தை வாரி இறைத்தது அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அப்படி எவ்வளவு செலவு செஞ்சிருக்காங்க தெரியுமா?

பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான். அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான். இருவரும் பாரிஸில் இருக்கும் தங்களது அதிகாரப்பூர்வ அரண்மனையான எல்ஸி பேலஸை, பூக்களால் அழகுபடுத்தி உள்ளனர். அதுவும் பூக்களால்.. இதற்காக அவர்கள் செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? 6 லட்சம் யூரோக்கள். இந்திய மதிப்பில் ஏறக்குறைய 5 கோடியே 35 லட்சம் ரூபாய்.. அம்மாடியோவ்…

இதற்கு முன் இருந்த அதிபர்கள் செலவு செய்த போதும், யாரும் இப்படி செலவு செய்யவில்லை. முந்தைய அதிபர்களை விட இவர்கள் 5 மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளனர். கொரோனாவிலிருந்து விடுபட உலகமே போராடி கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், நாட்டின் அதிபரே பொறுப்பில்லாமல் இப்படி நடந்து கொண்டது அவர்களது புகழை மங்க செய்துள்ளது.

விஷயமும் வெளியே பரவ, கொரோனா காலகட்டத்தில், நாட்டின் முதல் குடிமகனும், குடிமகளுமே இவ்வாறு செய்யலாமா என மக்கள் கொதித்து போய் உள்ளனர். வைரஸ் பரவலால் ஊரடங்கு காரணமாக, நாட்டிற்கு எந்த நாட்டு தலைவர்களும் வராத நிலையில், எதற்காக அரண்மனையை அழகுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளனர். மக்கள் வரிப்பணத்தை தேவையில்லாமல் இப்படி செலவு செய்து மக்களின் வாயில் விழுந்துள்ளனர். அவர்கள் கேள்வியும் நியாயம் தானே? நீங்களே சொல்லுங்கள்…

Views: - 7

0

0