மாஸ்க் அணியாமல் வந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தண்டால் தண்டனை வழங்கிய போலீஸ்…

21 January 2021, 9:06 am
Quick Share

இந்தோனேசியாவில் மாஸ்க் அணியாமல் வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு போலீசார் தண்டால் எடுக்கச் சொல்லி தண்டனை வழங்கியது தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்தோனேசியாவில் உள்ள பாலி பகுதியில் போலீசார் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாகப் பின்பற்றுகிறார்களா எனக் கவனிக்க அடிக்கடி ரோந்து செல்கின்றனர். இப்படியாக ரோந்து செல்லும் போது அங்குள்ள ஒரு ரிசார்ட்டில் நடத்திய ரைடில் 70 பேர் மாஸ்க் போடாமல் இருந்துள்ளனர். அவர்களைப் பிடித்த போலீசார் அவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். அந்நாட்டுக் காசு படி 1 லட்சம் ருபையா (இந்திய மதிப்பில் சுமார் ரூ500) அபராதம் விதித்துள்ளனர்.

பிடிபட்ட 70 பேரில் 40 பேர் அபராதம் கட்டியுள்ளனர் மீதி 30 பேர் போலீசாரிடம் தங்களிடம் அபராதம் கட்ட பணம் இல்லை எனச் சொல்லியுள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த 30 பேரில் மாஸ்கே இல்லாமல் இருந்தவர்களுக்கு 50 தண்டால் எடுக்கச் சொல்லியும், மாஸ்க் சரியாக அணியாமல் இருந்தவர்களுக்கு 15 தண்டால் எடுக்கச் சொல்லியும் தண்டனை விதித்துள்ளனர். இந்த விடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ வருகிறது.

இது அந்த ரிசார்ட்டில் மட்டுமல்ல பாலி பகுதியில் யார் மாஸ்க் அணியாமல் வந்தாலும் அவர்கள் அபராதம் கட்ட தவறினால் இந்த தண்டால் தண்டனை தான் வழுக்கப்படும் என அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பலர் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்த உங்கள் கருத்து என்ன?

Views: - 0

0

0