29 பேர் பலி..! பர்த்டே கொண்டாட்டம் நடந்த உணவகம் இடிந்து விபத்து..! சீனாவில் சோகம்..!

31 August 2020, 11:57 am
china_restaurant_collapse_updatenews360
Quick Share

வடக்கு சீன கிராமத்தில் உள்ள இரண்டு மாடி உணவகம், ஒரு நபரின் 80’வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சரிந்து விழுந்து 29 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் மேலும் 28 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும் அவசரநிலை மேலாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 57 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு என்ன காரணம் மற்றும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலைமை குறித்து உடனடியாக எந்த அறிவிப்பும் இல்லை.

ஸ்னிஃபர் நாய்கள், கிரேன்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப சென்சார்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளைத் தேடி, மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

சனிக்கிழமை காலை 9:40 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததாக அதிகாரப்பூர்வ சீனா டெய்லி செய்தித்தாள் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த விசாரணையை அமைச்சரவையின் பணி பாதுகாப்பு ஆணையம் மேற்பார்வையிடும் என்று அது கூறியது.

தொழில்துறை பாதுகாப்பில் சீனா பெரிய முன்னேற்றங்களைக் கண்டாலும், கட்டிடத் தரங்கள் குறிப்பாக கிராமப்புறங்களில் சில நேரங்களில் புறக்கணிக்கப்படுகின்றன. விபத்து நடந்த கட்டிடம், பெய்ஜிங்கிலிருந்து தென்மேற்கில் 630 கிலோமீட்டர் தொலைவில்ஷாங்க்சி மாகாணத்தின் சியாங்ஃபென் கவுண்டியில் அமைந்திருந்தது.

இப்பகுதி சீனாவின் நிலக்கரி மையமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட வெடிப்புகள், சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0