65 ஆண்டுகால தூதரக உறவு..! வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்ட சீன நேபாள கம்யூனிஸ்ட் அரசுகள்..!

1 August 2020, 1:08 pm
China_Nepal_UpdateNews360
Quick Share

சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான சீனாவின் உயர்மட்ட தலைமை, சீன-நேபாள் உறவை பாராட்டியது. மேலும் சீனா எப்போதும் நேபாளத்தை சமமாக கருதுவதாகக் கூறியுள்ளது. நேபாளத்துடனான இந்திய உறவு முறுகல் நிலையில் இருக்கும் சமயத்தில் சீன அரசு நேபாளத்தை பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இருதரப்பு உறவுகளை ஸ்தாபித்த 65’ஆவது ஆண்டு நிறைவையொட்டி நேபாளத் தலைவரான பித்யா தேவி பண்டாரியுடன் வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக்கொண்ட ஜி, சீனா நேபாளத்துடன் இணைந்து இருதரப்பு உறவின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் என்றார்.

இன்று காலை அதிகாரப்பூர்வ ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “இரு நாடுகளும் எப்போதும் ஒருவரை ஒருவர் மதிக்கின்றன. ஒருவருக்கொருவர் சமமாக கருதுகின்றன. அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துகின்றன. மேலும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தியுள்ளன.” என தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இரு தரப்பினரும் தோளோடு தோள் நின்று சீனாவிற்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்பின் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளனர் என்று ஜி கூறினார்.

தனது செய்தியில், பண்டாரி சீனாவின் கருத்தை எதிரொலிக்கும் வகையில், சீன அதிபர் ஜின்பிங்கின் சர்வதேச ஒத்துழைப்பு பற்றிய குறிப்பை அடிக்கடி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“நேபாளம் மனிதகுலத்திற்கான பகிரப்பட்ட எதிர்காலத்துடன் ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான சீனா முன்மொழிந்த பார்வையை வரவேற்கிறது மற்றும் பெல்ட் மற்றும் ரோடு திட்டத்தின் இணை கட்டமைப்பிற்கான ஒத்துழைப்பில் தீவிரமாக பங்கேற்கிறது.” என்று அவர் கூறினார்.

மேலும் சீனப் பிரதமர் லி கெகியாங், நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலியுடன் சீனாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான மேம்பட்ட பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்பு பற்றி பேசினார்.

பல்வேறு துறைகளில் அனைத்து வகையான ஒத்துழைப்பையும், பெல்ட் மற்றும் ரோடு திட்டத்திலும், இருதரப்பு உறவுகளை புதிய நிலைகளுக்கு உயர்த்தவும் சீனா நேபாளத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்று லி கூறினார்.

ஒலி, தனது வாழ்த்துச் செய்தியில், இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து, இருதரப்பு உறவுகள் நீடித்த, நிலையான வளர்ச்சியைக் கண்டுள்ளன என்று கூறினார்.

Views: - 0

0

0